Monday, July 16, 2018

Grade 5 Scholarship Past Paper Questions 5

புலமைப் பரிசில் கடந்த கால வினாக்கள்








கீழே தரப்பட்டுள்ள பாடலை வாசிக்க

இந்த உலகில் நீங்கள்
இயற்றும் தொண்டில் எல்லாம்
தந்தை தாயைப்  பேணும்
தருமம் ஒன்றே பெரிது

கன்றை நினைத்து உள்ளம்
கசியும் பசுவைப் போல
நன்றி புரிவோர் தம்மை
நாமும் நினைக்க வேண்டும்

பருவம் பார்த்து நாங்கள்
பயிரைச் செய்தல் போலக்
கருமந் தொடங்கும் போது
காலம் பார்க்க வேண்டும்
                         
                                        வித்துவான் க  வேந்தனார்
  • அறம் என்ற கருத்தை தரும் சொல் ஒன்று எழுதுக?
  • தொண்டுகளில் பெரியது எனக் கவிஞர் கருதுவது எது?
  • "உள்ளம் கசிதல்" என்பதன் பொருள் யாது?
  • "நாம் நினைத்தோம் " என்பதனை ஒருமையில் மாற்றி எழுதுக?
  • தந்தை தாயைக் குறிக்கும் ஒரு சொல் எழுதுக?
  • பசுவின் இளமைப் பெயர் யாது?
  • இப்பாடலில் இடம்பெறும் உயர்திணை பெண்பாற்சொல் எது?
  • இங்கு இடம்பெறும் முன்னிலை பன்மைப் பெயர்ச்சொல் எது?
  • கவிஞர் கன்றை யாருக்கு ஒப்பிடுகிறார்?
  • "பருவம் பார்த்துப் பயிர் செய்தல் " என்ற கருத்தை தரும் பழமொழி ஒன்றை எழுதுக?


பின்வரும் தொடர்களால் உணர்த்தப்படும் கருத்தினை எழுதுக.
  • சூரியனைக் கண்ட பனிபோல 
  • கல்லின் மேல் எழுதிய எழுதுப்போல 



கீழே தரப்பட்டுள்ள கடிதத்தினை வாசித்து வினாக்களுக்கு விடை எழுதுக.
பூங்கா ஒழுங்கை
திருநகர்

அன்புள்ள டினேஷ்,
அண்மையில் ஒரு நாள் பொதுநூலகத்தில் புத்தகமொன்றைக் கண்ணுங்கருத்துமாக வாசித்துக் கொண்டிருந்தபோது, நிர்மலன் அங்கு வந்தான் என்ன ஆச்சரியம்! அவன் என்னோடு கதைத்தான் விளையாடுவதற்கு நல்ல மைதானம் ஒன்று அங்கிருப்பதாகக் கூறினான். வருகின்ற ஞாயிறுக்கிழமை நிர்மலனின் வீட்டுக்கு நான் போகின்றேன் உனக்குத் தெரிந்த எனது சித்தப்பாவின் மகனான வாகீசனும் அங்கு வருவதாகக் கூறினான் நீயும் அங்கு போவதற்கு வா.
இப்படிக்கு
அன்புள்ள
மோகன்

  • கடிதம் எழுதும் போது இடம்பெற வேண்டிய முக்கிய அம்சமொன்றை இக்கடிதத்தில் காணப்படவில்லை. அது யாது என எழுதுக?
  • வியப்பை வெளிப்படுத்த இடப்படும் நிறுத்தற்குறி யாது?
  • இக் கடிதத்தில் "அங்கு" என்பதனால் கருதப்படுவது யாது?
  • இங்குள்ள விவரங்களின் படி வாகீசனுக்கும் மோகனுக்கும் இடையிலுள்ள உறவுமுறை யாது?




பின்வரும் கவிதைகளைக் கொண்டு வினாக்களுக்கு விடை தருக.

சித்திரை வந்தால் வசந்தம் பிறக்கும்
வண்ண வண்ணப் பூக்கள் எங்கும்
கொத்துக் ...................... மலர்ந்து பொலியும்
இக்காட்சிதனைக் காண களிப்புடன் வாரீர்.

பூக்களில் வண்டுகள் தேன் குடிப்பதைப் பாரீர்
மகிழ்வுடன் பாடல் இசைப்பதைப் கேளீர்
சிறகடித்து எழுந்து அங்கும் இங்கும்
செல்வதைப் பாரீர் அதோ செல்வதைப் பாரீர்

  • வண்ண வண்ணப் பூக்கள் என்பதன் கருத்து யாது?
  • வண்டுகள் எவற்றின் மீதிருந்து பாடல் இசைக்கின்றன?
  • முதற் கவிதையில் உள்ள வெற்றிடத்துக்குப் பொருத்தமான ஒரு சொல்லை எழுதுக?
  • சந்தோசமாக என்னும் கருத்தைத் தரும் இரு சொற்கள் யாவை?



பின்வரும் பந்தியை வாசிக்க.

பாடசாலையின் காலைக் கூட்ட ஆரம்பத்தில் அதிபர் பின்வருமாறு கூறினார்.

"இன்று எமக்கு மிகவும் மகிழ்ச்சியான ஒருநாள். எமது பாடசாலையின் மாணவன் ஒருவன் சர்வதேச ஓவியப் போட்டியில் முதலிடத்தைப் பெற்று எமது பாடசாலைக்குப் பெருமையைத் தேடித் தந்துள்ளான். அவனுக்கு உரிய பரிசைப் பெற்றுக் கொள்வதற்காக ஜப்பான் நாட்டுக்கு வருமாறு அழைப்பும் வந்துள்ளது." அதிபர் இவ்வாறு கூறியபோது மிகவும் அமைதி நிலவியது மேலும் தமது உரையைத் தொடர்ந்து அதிபர் இவ்வாறு கூறினார்.
"ஐந்தாம் தரத்தில் கல்வி கற்கும் அவ் அதிஷ்டக் குழந்தைதான் கண்ணன். பாடசாலை சார்பாக நான் அவனுக்கு வாழ்த்துக் கூறுகிறேன். இப்போது நான் அந்தப் பெரிமைக்குரிய மாணவனை முன்னால் வருமாறு அழைக்கின்றேன்." அமைதியை கலைத்துக் கொண்டு அனைவரும் கைதட்டல்களை வழங்கினார்.

நீர் தான் கண்ணன் எனின் இச்சந்தர்ப்பத்தில் உமக்கு ஏற்படும் உணர்வுகளை வெளிக்காட்டும் ஆக்கபூர்வமான மூன்று வாக்கியங்கள் எழுதுக.
(ஒவ்வொரு வாக்கியத்திலும் ஐந்து சொற்களுக்கு மேல் இடம்பெற வேண்டும். எழுவாய், பயனிலைத் தொடர்புகளும் எழுத்துக்கூட்டலும் சரியாக இருக்க வேண்டும்.)
  • (i) ..................................................
  • (ii) ..................................................
  • (iii) .......................................................



No comments:

Post a Comment