Monday, July 16, 2018

Grade 5 Scholarship Past Paper Questions 7

புலமைப் பரிசில் கடந்த கால வினாக்கள்

கண்ணே எழுந்திடுவாய்
கண்மணியே கண்மலர்வாய்
சின்னஞ் சிறு மலரே
துயில் நீங்கி நீ எழுவாய்
காகம்  கரையுது பார்
காலையும் ஆனது பார்
சேவல் கூவுது பார்
சின்னக் குயில் பாடுது பார்

  • இப்பாடல் நாளின் எந்நேரத்திற்குரியதாக  அமைகின்றது?
  • "சின்னஞ் சிறு மலர் " என்ற அடி குறிப்பது?
  • இதிலுள்ள பெயரடை மொழிச் சொல் ?
  • "நித்திரை விட்டு எழுந்திடு " என்ற கருத்தை தருவது?
  • முன்னிலை ஒருமைச் சொல்?
  • அஃறினை படர்க்கை ஒருமைப் பெயர்கள் இரண்டு எழுதுக?
  • பார் என்பதன் கருத்து?
  • பொழுது புலர்வதை எமக்கு அறிவிப்பது?
  • நித்திரை என்பதன் கருத்தை தரும் சொல்?
  • இப்பாடல் யாரால் பாடப்படுவதாக அமைந்துள்ளது?



பின்வரும் தொடர்களுக்குரிய தனிச்சொல்லை எழுதுக

  • கற்ற கலையை முதன் முதல் மேடை ஏற்றுதல் ?
  • இருபத்தைந்தாம் ஆண்டின் நிறைவில் கொண்டாடப்படுவது?



சம்பவத்தின் மீதிப் பகுதியை நிறைவு செய்வதற்குப் பொருத்தமான மூன்று வாக்கியங்கள் எழுதுக .
(ஒவ்வொரு வாக்கியத்திலும் ஐந்து சொற்களுக்கு மேல் இடம்பெற வேண்டும். எழுவாய், பயனிலைத் தொடர்புகளும் எழுத்துக்கூட்டலும் சரியாக இருக்க வேண்டும்.)


வேகமாக வீசிய காற்றினால் கதவு மூடப்பட்டது. புத்தகம் ஒன்றை வாசித்துக் கொண்டிருந்த நான் திகைப்படைந்தேன். புத்தகத்தை ஒருபக்கத்தில் வைத்து விட்டு வீட்டுக்கு வெளியே வந்தேன். காற்றினால் மரங்கள் சுழன்று சுழன்று ஆடுவது என் கண்களுக்குத் தெரிந்தது. அத்துடன் அணில் ஒன்று ஓயாமல் கீச்சிடும் சத்தமும் கேட்டது. நான் அச்சத்தம் வந்த திசையை நோக்கினேன்.


  • (i) ..................................................
  • (ii) ..................................................
  • (iii) .......................................................



No comments:

Post a Comment