Thursday, October 25, 2018

உணவும் போசணைகளும் ஊட்டப்பிரச்சினைகளும்

மனிதனின் அடிப்படைத் தேவைகளுள் உணவு மிகவும் இன்றியமையாததாகும். எமது உடலுக்குத் தேவையான போசணைப் பதார்த்தங்கள் உணவின் மூலமே கிடைக்கின்றன. எமது உடலுக்குத் தேவையான போசணைப்  பதார்த்தங்களை  பின்வருமாறு வகைப்படுத்த்தலாம்.
  • மாப்பொருள்/காபோஹைதரேட் 
  • புரதங்கள் 
  • கொழுப்புக்கள் 
  • விற்றமின்களும் கனிப்பொருட்களும் 
எமது  ஒருநாள் உணவில் இருக்கவேண்டிய போசணைகளின் அளவு விகிதாசாரத்தில் கீழே தரப்பட்டுள்ளது.


போசணைகளும் ஊட்டப்பிரச்சினைகளும்


மேற்கூறப்பட்ட போசணை பதார்த்தங்களைப் போதுமான அளவு கொண்ட உணவு ஆரோக்கியமான உணவாக அமைகின்றது. எமது உணவின் மூலமே பின்வரும் உடற் தொழிற்பாடுகள் நிறைவேற்றப்படுகின்றன.
  • சக்தி பெறல் 
  • உடல் வளர்சியடைதல் 
  • நோயிலிருந்து பாதுகாப்பு பெறல் 

போசணைஉடற் தொழிற்பாடுகள்உணவு வகைகள்  
மாப்பொருள்சக்தி பெறல்தானியங்கள்(குரக்கன்,அரிசி, கோதுமை, இறுங்கு, சோளம்), கிழங்குகள்(மரவள்ளி,வற்றாளை, உருளைக்கிழங்கு), வெல்லம், காய்கள்(பலாக்காய், ஈரப்பலா)
புரதங்கள்உடல் வளர்சியடைதல்விலங்குணவு: பால், மீன், இறைச்சி, முட்டை, கருவாடு
தாவரவுணவு:கௌபி, பருப்பு,  பயறு, கடலை, போஞ்சி, அவரை, சோயா, உழுந்து 
கொழுப்புக்கள்சக்தி பெறல்எண்ணைவகைகள், இறைச்சி, மீன், சீஸ், பட்டர், மாஜரின், தேங்காய், பசுநெய், நிலக்கடலை, சில மீன்கள் 
விற்றமின்களும் கனிப்பொருட்களும்நோயிலிருந்து பாதுகாப்பு பெறல்மரக்கறிகளும் பழவகைகளும், பால், பாற்பொருட்கள், ஈரல், மீன், முட்டை, இறைச்சி, கீரைவகைகள்   


ஊட்டப் பிரச்சினைகள்

உடலுக்குத் தேவையான பதார்த்தங்கள் தேவையான அளவை விடக் குறையும் போது அல்லது கூடும் போது ஊட்டப் பிரச்சினைகள் ஏற்படும்.

காபோகைதரேற்று, புரதம், கொழுப்பு என்பன மா ஊட்டங்கள் எனவும்,
விற்றமின்கள், கனியுப்புக்கள் நுண் ஊட்டங்கள் எனவும் அழைக்கப்படும்.


ஊட்டப் பிரச்சினைகள்
















ஊட்டக் குறைபாடு விளைவுகள்  தவிர்க்கும் முறை 
அயடீன் உடல் வளர்ச்சி குறைதல், கற்றல் குறைபாடு, கண்டக் கழலை அயடீன் கலந்த உப்பு, கடல் மீன்கள், கருவாடு 
கல்சியம் எலும்பு, பல் வளர்ச்சி தடைப்படல் நெத்தலி, சிறுமீன்கள், முட்டை, பால், பாலுணவுகள்
நாகம் உடல் வளர்ச்சி குறைதல், நோயெதிர்ப்பு குறைதல் போஞ்சி, நிலக்கடலை, செந்நிற இறைச்சி, கடலுணவு 
விற்றமின் A தோல் நோய்கள், நோயெதிர்ப்பு குறைதல், மாலைக்கண் மஞ்சள், கடும் பச்சை நிறமான பழங்களும் மரக்கறிகளும் (கரட், பூசணி, தாக்காளி, மா, இறைச்சி, முட்டை, பால், முட்டை , ஈரல், மீனெண்ணெய் )
விற்றமின் B குருதிச்சோகை, பெரிபெரி தவிடு நீக்காத அரிசி, காளான், இறைச்சி, மீன், சோளன், 
விற்றமின் C  ஸ்கேவி நோய் (முரசு கரைதல், பல் இடுக்கில் இரத்தம் வடிதல்)புதிய பழங்கள், திராட்சை, பச்சைக்கீரை, புளிப்புப்பழங்கள்
விற்றமின் D என்புருக்கி, சிறுபிள்ளைகளின் எலும்பு விகாரமடைதல்

மீனெண்ணை, பால், முட்டை, சூரிய ஒளி
விற்றமின் E  தோல் நோய்கள், மலட்டுத்தன்மை, குருதி உறைதல், செங்குருதி கலன்கள் அழிதல் தானியங்கள், வித்துக்கள், முட்டை மஞ்சட்கரு, கீரைவகை, கோதுமை
இரும்பு குருதிச்சோகை, பசியின்மைமீன்,பச்சைநிறக் காய்கறிகள், ஈரல், நிலக்கடலை, முருங்கையிலை, தானியங்கள்
விற்றமின் Kஇரத்தப்பெருக்கு (வெட்டப் பட்ட இடத்தில் மட்டுமல்லாது வேறு இடத்திலும் ஏற்படலாம்.Broccoli ப்ரோக்கோலி, கோவா, கிவி, வெண்டிக்காய், சலட், வெள்ளரி


சைவ உணவுகள்
செடிகொடிகளில் இருந்து பெறப் படும் உணவானது "சைவ உணவு" எனப் படுகின்றது. இதனை மரக்கறி அல்லது சைவ உணவு என்பர். உலகில் கிட்டதட்ட இரண்டாயிரதிற்கும் அதிகமான தாவர இனங்கள் பயிர் செய்யப்படுகிறது.

விதைகள்
தானியங்கள்: நெல், கோதுமை, குரக்கன், சோளம்
அவரையினங்கள்: சோயா, பருப்பு, கௌபீ, பயறு, உழுந்து
எண்ணெய்: எள், சூரியகாந்தி, தேங்காய்

மரக் காய்கறிகள்
கிழங்கு வகை: மரவள்ளி, உருளைக்கிழங்கு
இலைவகை: கீரைகள் பட்டியல், பொன்னாங்காணி, வல்லாரை, பசளி
வேர் : முள்ளங்கி, காரட், வெங்காயம்
தண்டு : வாழைத்தண்டு

பழங்கள்
காய்கறிகள்

அசைவ உணவுகள்
இறைச்சி
கடல் உணவுகள்
முட்டை

இதர உணவு வகைகள்
தாவரங்கள் மற்றும் விலங்குகள் அல்லாத நுண்ணுயிர்களும் உணவில் பயன்படுத்தப்படுகிறது காளான். ரொட்டிகள், மது, தயிர் முதலியவற்றின் நொதித்தல் முறைகளுக்காக நுண்ணுயிர்களும், உணவு பதப்படுத்த உப்பு, ஆப்ப சோடா உப்பு முதலியவையும் உபயோகப்படுத்தப்படுகின்றன.


No comments:

Post a Comment