இலங்கையின் சில நகரங்களுகிடையே உள்ள தூரங்கள் கீழேயுள்ள கோட்டுப் படத்தில் காணப்படுகின்றன.
கொழும்பு | |||
காலி | 116 | ||
மாத்தறை | 45 | 161 | |
அம்பாந்தோட்டை | 77 | 122 | ? |
அம்பாந்தோட்டையிலிருந்து மாத்தறை, காலி ஆகிய நகரங்களுக்கூடாகக் கொழும்புக்குள்ள தூரத்தைக் காண்க. ..................................... km
கேள்வி 2
தரப்பட்டுள்ள தகவல்களுக்கேற்ப அட்டவணையில் உள்ள வெற்றிடத்தை நிரப்புக.
இருந்து | வரைக்கும் | தூரம் |
---|---|---|
கொழும்பு | சிலாபம் | 76km |
கொழும்பு | புத்தளம் | 142km |
புத்தளம் | அனுராதபுரம் | 72km |
சிலாபம் | அனுராதபுரம் | ........km |
கேள்வி 3
கீழ் வரும் பாதை வரிப்படத்தை அடிப்படையாகக் கொண்டு, கேள்விகளுக்கு விடை தருக. வரிப்படம் A, B, C, D, E ஆகிய ஐந்து நகரங்களுக்கு இடையேயான தூரத்தைக் காட்டுகின்றது.
A இலிருந்து E க்குச் செல்வதற்கான மிகக் குறுகிய பாதையின் தூரம் யாது?
A இலிருந்து பயணத்தை ஆரம்பித்த வசந்தன் B ஊடாகவும், நாதன் C ஊடாகவும், இராஜன் D ஊடாகவும் E ஐ அடைந்தனர். அவர்களின் வேகங்கள் சமனாயின், இப்பயணத்திற்கு மிகவும் கூடிய நேரத்தை எடுத்தவர் யார்?
கேள்வி 4
ஒருவர் கொழும்பிலிருந்து புறப்பட்டு அனுராதபுரம் சென்று சிலாபத்திற்கு திரும்பினார். அவர் பிரயாணம் செய்த தூரம் யாது? ................km
கடந்த கால புலமைப்பரிசில் வினாப் பத்திரத் தூரங்கள் தொடர்பான கேள்விகள். Scholarship past paper questions on distance.
No comments:
Post a Comment