சுற்றாடல் தரம் 3, 4, 5 பயிற்சிகள்
அடைப்பினுள் உள்ள சொற்களிலிருந்து திருத்தமான சொல்லைத் தெரிவு செய்து வெற்றிடங்களை நிரப்புக.
கத்தரிக்கோல் | கைவில்லை | பாக்குவெட்டி | கவர்ச்சுத்தியல் |
அரம் | தீதாள் | கைத்தாளம் | உடுக்கு |
- சிறு பொருட்களைப் பெருப்பித்துப் பார்ப்பதற்குப் பயன்படும் உபகரணம்? ...............................................
- கத்தியைத் தீட்டுவதற்குப் பயன்படுத்தப்படும் உபகரணம்? ...............................................
- இரும்பாணியைக் கழற்றுவதற்குப் பயன்படுத்தப்படும் உபகரணம்? ...............................................
- தாளம் போடுவதற்குப் பயன்படுத்தப்படும் உபகரணம்? ...............................................
- தைக்கும் போது பாதுகாப்பிற்குப் பயன்படுத்தப்படும் உபகரணம்? ...............................................
அடைப்பினுள் உள்ள சொற்களிலிருந்து திருத்தமான சொல்லைத் தெரிவு செய்து வெற்றிடங்களை நிரப்புக.
பாரந்தூக்கி | துருத்தி | மட்டப் பலகை | தூக்குக் குண்டு |
சீவுளி | கலப்பை | வாள் | துறப்பணம் |
- நெருப்பு எரியக் காற்று வழங்கும் உபகரணம்? ...............................................
- மரப் பலகையை அழுத்தமாக்கப் பயன்படும் உபகரணம்? ...............................................
- பாரங்களை மேலே உயர்த்தப் பயன்படும் கருவி? ...............................................
- வயலில் சேற்றை மட்டமாக்கப் பயன்படும் உபகரணம்? ...............................................
- ஒரு சுவரை நிலைக்குத்தாகக் கட்டியெழுப்பப் பயன்படும் உபகரணம்? ...............................................
பின்வரும் அட்டவணையில் முதலாவது நிரையில் காட்டப்பட்டுள்ள ஒவ்வொன்றையும் உட்கொள்வதன் மூலமாக அதிகமாகப் பெறக்கூடிய ஒரு உணவுச்சத்து எதுவென்பதை உரிய கூட்டில் ✓ என்ற அடையாளத்தை இட்டுக் குறிப்பிடுக.
உணவு | புரதம் | மாப்பொருள் | கொழுப்பு | விட்டமின் | கனிப் பொருள் |
---|---|---|---|---|---|
பால்மா | |||||
மீன்வகை | |||||
அவரைப்பயிர் | |||||
காய்கறி | |||||
புதிய பழங்கள் | |||||
கிழங்குகள் | |||||
வல்லாரை | |||||
பசளிக்கீரை |
No comments:
Post a Comment