அமிலமும் காரமும்
நாம் வீடுகளில் அன்றாடம் பயன் படுத்தும் பொருட்களில் அடங்கியுள்ள இரசாயனப் பதார்த்தங்களின் இயல்புகளுக்கேற்ப அவை அமிலம்(Acid), காரம்(Base), நடுநிலைப் பதார்த்தங்கள்(Neutral Substance) என வகை படுத்தப்படும்.
அமிலங்கள் | காரங்கள் | நடுநிலையான பதார்த்தங்கள் |
---|---|---|
தோடை | நீர் | |
எலுமிச்சை | மக்னீசியாப்பால் | மதுசாரம் |
புளி | சுண்ணாம்பு | உப்புக் கரைசல் |
அன்னாசி | சவர்க்காரம் | மண்ணெண்ணெய் |
வினாகிரி | ||
பிளிங்காய் | ||
தக்காளி |
இவ்வாறே வீடுகளிற் பயன் படுத்தப்படும் பொருட்களைப் போலவே ஆய்வு கூடங்களிலும் இரசாயனப் பதார்த்தங்கள் வகை படுத்தப்பட்டுள்ளன.
ஆய்வு கூடத்தில் அதிகம் பயன்படுத்தப்படும் இரசாயனப் பதார்த்தங்கள்
அமிலங்கள் | காரங்கள் |
---|---|
சல்பூரிக் அமிலம் | சோடியம் ஐதரொரொட்சைட்டு |
நைத்திரிக் அமிலம் | பொற்றாசியம் ஐதரொரொட்சைட்டு |
ஐதரோகுளோரிக் அமிலம் |
காட்டிகள்(Indicators)
சில பதார்த்தங்கள் அமிலங்களுடன் ஒரு நிறத்தையும், காரங்களுடன் இன்னொருநிறத்தையும் தருகின்றன. இவ்வாறு அமிலகளுடன் ஒரு நிறத்தையும் காரங்களுடன் இன்னொரு நிறத்தையும் தருகின்ற பதார்த்தங்கள் காட்டிகள் என அழைக்கப்படும்.
நாம் சில தாவரங்களின் பகுதிகளை அவித்து பெறப்படும் சாறுகளை காட்டிகளாகப் பயன்படுத்தலாம்.
செவ்வரத்தம் பூச்சாறு
ஊதாப் பூச்சாறு
நீலப் பூச்சாறு
பாக்குச் சாறு
மஞ்சள் நீர்
சிவப்பு கோவாச்சாறு
ஆய்வு கூடங்களில் பயன்படுத்தப்படும் காட்டிகள்
பாசிச்சாயத்தாள் (நீலம், சிவப்பு)
PH தாள்
பினோத்தலின்
மெதையிற் செம்மஞ்சள்
பாசிச்சாயத்தாள்
இவை இரண்டு வகைப்படும் நீலப் பாசிச்சாயத்தாள், சிவப்புப் பாசிச்சாயத்தாள்.
அமிலம் : நீலப் பாசிச்சாயத்தாளை சிவப்பு நிறமாகும்.
காரம் : சிவப்புப் பாசிச்சாயத்தாளை நீல நிறமாக்கும்.
நடுநிலையான பதார்த்தங்கள் : நீலப் பாசிச்சாயத்தாளையோ, சிவப்புப் பாசிச்சாயத்தாளையோ நிறமாற்றாது.
PH தாள்
PH தாளைப் பயன்படுத்துவதன் மூலம் அமில, கார, நடுநிலைப் பதார்த்தங்களைவேறுபடுத்தி அறிந்து கொள்ளலாம்.
அமிலங்கள் : 1,2,3,4,5,6
காரங்கள் : 8,9,10,11,12,13,14
நடுநிலை : 7
பினோத்தலின்
இது வெண்ணிறத்தூள் மதுசாரத்தில்(எதனோல்) அல்லது நீரில் கரைக்கப்பட்டு நிறமற்ற கரைசல் பெறப்படும். இது காரங்களுடன் சேரும் போது இளஞ்சிவப்பு நிறமாகும். அமிலங்களுடன் சேரும் போது நிறமற்றதாகவே இருக்கும்.
மெதையிற் செம்மஞ்சள்
இது மஞ்சள் நிறத்தூள் நீரில் கரைக்கப்பட்டு மஞ்சள் நிறக் கரைசல் பெறப்படும். இக் கரைசல் அமிலங்களுடன் சேரும் போது சிவப்பு நிறமாகும்; ஆனால் காரங்களுடன் சேரும் போது மஞ்சள் நிறமாகவே இருக்கும்.
No comments:
Post a Comment