Friday, April 24, 2020

முழு எண்களின் கணிதச் செய்கைகள்







இரண்டு எண்களுக்கு  இடையிலான  கணிதச் செய்கைகள்
  • கூட்டல், பெருக்கல், கழித்தல், வகுத்தல் முறையே '+', 'x', '-', '÷' என்ற குறியீடுகளினாற் குறிக்கப்படும்.
    • 6+3=9
    • 6-2=4
    • 6x3=18
    • 6÷3=2
  • ஒன்றுக்கு மேற்பட்ட கணிதச் செய்கைகளைக் கொண்ட கோவைகள்.
    • கூட்டலை மட்டும் கொண்ட கோவைகளைச் சுருக்குதல்.
      • 5+3+4=12
      • 3+2+1+6=12
      • கூட்டற் செய்கைகள் மட்டும் கணிதச் செய்கையாக உள்ளபோது சுருக்கும் ஒழுங்கு எம்முறையில் இருந்தாலும் ஒரே விடை கிடைக்கும்.
    • பெருக்கலை மட்டும் கொண்ட கோவைகளைச் சுருக்குதல்.
      • 5x3x2=30
      • 5x5x2x10=500
      • பெருக்கல்ச் செய்கைகள் மட்டும் கணிதச் செய்கையாக உள்ளபோது சுருக்கும் ஒழுங்கு எம்முறையில் இருந்தாலும் ஒரே விடை கிடைக்கும்.
    • கூட்டல், கழித்தல் ஆகிய கணிதச் செய்கைகள் மட்டும் கொண்ட கோவைகள்.
      • 10-7+2=5
      • 6+7-2+4=15
      • கூட்டல், கழித்தல் ஆகிய கணிதச் செய்கைகள் மட்டும் இருந்தால் இடமிருந்து வலமாகக் கணிதச் செய்கைகளைச் செய்ய வேண்டும்.
    • பெருக்கல், வகுத்தல் ஆகிய கணிதச் செய்கைகள் மட்டும் கொண்ட கோவைகள்.
      • 36÷6x3=18
      • 3x6÷2=9
      • பெருக்கல், வகுத்தல் ஆகிய கணிதச் செய்கைகள் மட்டும் இருந்தால் இடமிருந்து வலமாகக் கணிதச் செய்கைகளைச் செய்ய வேண்டும்.
    • கழித்தல் மட்டும் பல தடவைகள் வந்தால்
      • 10-3-2=5
      • 20-10-6-3=1
      • கழித்தல் மட்டும் கணிதச் செய்கையாக  இருந்தால் இடமிருந்து வலமாகக் கணிதச் செய்கைகளைச் செய்ய வேண்டும்.
    • வகுத்தல் மட்டும் பல தடவைகள் வந்தால்
      • 36÷6÷3=2
      • 50÷5÷2=5
      • வகுத்தல் மட்டும் கணிதச் செய்கையாக  இருந்தால் இடமிருந்து வலமாகக் கணிதச் செய்கைகளைச் செய்ய வேண்டும்.
    • மேலும் சுருக்குதல் (கூட்டல், பெருக்கல்)
      • 10+2x3=16
      • 5+2x10=25
      • முதலிற் பெருக்கலையும் பின்னர் கூட்டலையும் செய்ய வேண்டும்.
    • மேலும் சுருக்குதல் (கூட்டல், வகுத்தல்)
      •  5+10÷2=10
      • 20+10÷5=22
      • முதலிற் வகுத்தலையும் பின்னர் கூட்டலையும் செய்ய வேண்டும்.
    • அடைப்புக்களுடனான கோவைகளைச் சுருக்குதல்
      • 10-(3-2)=9
      • 20-(5+2)=13
      • முதலில் அடைப்பையும் பின்னர் கழித்தலையும் செய்ய வேண்டும்.
எனவே எண்களுடனான கோவைகளைச் சுருக்கும் நியம ஒழுங்கு ஒன்று உள்ளது. அந்த ஒழுங்கிலேயே கணிதச் செய்கைகள் அமைய வேண்டும்.

  • முதலில்() அடைப்பினுள் உள்ளவற்றை சுருக்கவேண்டும்.
  • அடுத்ததாக x பெருக்கலையும, ÷ வகுத்தலையும் இடமிருந்து வலமாகச் சுருக்க வேண்டும.
  • இறுதியாக + கூட்டல், - கழித்தல் பகுதிகளை இடமிருந்து வலமாக சுருக்க வேண்டும்.  

உ+ம்:
சுருக்குக1.
8+5x(10+2)÷3-4
=8+5x12÷3-4
=8+60÷3-4
=8+20-4
=28-4
=24

உ+ம்:
சுருக்குக2:
5x(10+12)÷11
=5x22÷11
=110÷11
=10

சுருக்குக3:
3+6x(5+4)÷3-7
=3+6x9÷3-7
=3+54÷3-7
=3+18-7
=21-7
=14

No comments:

Post a Comment