Wednesday, April 29, 2020

எண்ணொன்றின் வகுபடும் தன்மை






எண்ணொன்று 2, 3, 4, 5, 6, 9,10 ஆகிய எண்களால் வகுபடும் என்பதை இலகுவாக கண்டுபிடித்தல்.
  • முழுவெண்ணொன்று பூச்சியம் தவிர்ந்த இன்னொரு எண்ணினால் மீதியின்றி வகுப்படுமாயின் முதலாவது எண் இரண்டாவது எண்ணால் வகுபடும் எனப்படும்.
  • இரண்டாவது எண் முதலாவது எண்ணின் காரணியாகும்.
  • உ+ம்:
    • 10/5 =2 மீதி 0 ஆகவே 10 என்ற எண் 5 ஆல் வகுபடும்;  5, 10 இன் காரணியாகும்.
    • 11/5 =2 மீதி 1 ஆகவே 11 என்ற எண் 5 ஆல் வகுபடாது;  5, 11 இன் காரணியாகாது.
இலக்கச்சுட்டி
  • எண்ணொன்றின் இலக்கங்களைக் கூட்டி, 1 தொடக்கம் 9 வரையுள்ள தனி இலக்கமாகப் பெறப்படும் பெறுமானம் அவ்வெண்ணின் இலக்கச்சுட்டி எனப்படும். 
  • உ+ம்:
    • 351 - இலக்க்கச் சுட்டி = 3+5+1=9 ஆகும்.
    • 1732 - இலக்கச்சுட்டி  =1+7+3+2=13=1+3=4 ஆகும்.
ஒரு எண் இரண்டினால் வகுபடும் என்பதை இலகுவாக அறிதல்.
  • எண்ணொன்றின் ஒன்றினிடத்து இலக்கம் 2 ஆல் வகுபடும் எனின் அந்த எண் 2 ஆல் வகுபடும்.
  • உ+ம்:
    • 104 இன் ஒன்றாமிடத்து இலக்கம் 4 இது 2 ஆல் வகுபடும். ஆகவே  104 இரண்டால் வகுபடும்.
    • 789 வகுபடாது.
    • 10868 வகுபடும்.
    • 765 வகுபடாது.
    • 320 வகுபடும்.
    • 129 வகுபடாது.
ஒரு எண் மூன்றால் வகுபடும் என்பதை இலகுவாக அறிதல்.
  • எண்ணொன்றின் ஒன்றின் இலக்கச் சுட்டி 3 ஆல் வகுப்படுமாயின்  அந்த எண் 3 ஆல் வகுபடும்.
  • உ+ம்:
    • 603= 6+0+3=9 இவ் இலக்கச்சுட்டி 9 மூன்றால் வகுபடும் எனவே 603 என்ற எண் மூன்றால் வகுபடும்.
    • 170=1+7 = 8 மூன்றால் வகுபடாது.
    • 125=1+2+5= 8 மூன்றால் வகுபடாது.
    • 1012=1+0+1+2=4 மூன்றால் வகுபடாது.
    • 171= 1+7+1=9 மூன்றால் வகுபடும்.
    • 1062=1+0+6+2=9 மூன்றால் வகுபடும்.
    • 105=1+0+5=6 மூன்றால் வகுபடும்.
    • 102=1+0+2=3 மூன்றால் வகுபடும்.
ஒரு எண் நான்கால் வகுபடும் என்பதை இலகுவாக அறிதல்.
  • இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட இலக்கங்களையுடைய எண்ணொன்றின் கடைசி இரண்டு இலக்கங்களும் 4 ஆல் வகுபடும் எனின் அந்த எண் 4 ஆல் வகுபடும்.
  • உ+ம்:
    • 12 இது இரண்டு இலக்க எண் இது நான்கால் வகுபடும்.
    • 112 இது மூவிலக்க எண் கடைசி இரண்டிலக்கம் 12 இது நான்கால் வகுபடும் எனவே 112 நான்கால் வகுபடும்.
    • 1520 இது நான்கால் வகுபடும்.
    • 1767 இது நான்கால் வகுபடாது.
    • 2007 இது நான்கால் வகுபடாது.

ஒரு எண் ஐந்தால் வகுபடும் என்பதை இலகுவாக அறிதல்.
  • எண்ணொன்றின் ஒன்றினிடத்து இலக்கம் 0 அல்லது 5  ஆக இருப்பின்  அந்த எண் 5 ஆல் வகுபடும்.
  • உ+ம்:
    • 20 - ஒன்றினிடத்து இலக்கம் 0 இது ஐந்தால் வகுபடும்.
    • 23 - ஒன்றினிடத்து இலக்கம் 3 இது ஐந்தால் வகுபடாது.
    • 105 - ஒன்றினிடத்து இலக்கம் 5 இது ஐந்தால் வகுபடும்.
    • 100562 - ஒன்றினிடத்து இலக்கம் 2 இது ஐந்தால் வகுபடாது.
    • 207 -ஒன்றினிடத்து இலக்கம் 3 இது ஐந்தால் வகுபடாது.
ஒரு எண் ஆறால் வகுபடும் என்பதை இலகுவாக அறிதல்.
  • எண்ணொன்று 2 ஆலும் 3 ஆலும் மீதியின்றி வகுப்படுமாயின் அந்த எண் 6 ஆல் வகுபடும்.
  • உ+ம்:
    • 102 - ஒன்றினிடத்து இலக்கம் 2 இது இரண்டால் வகுபடும். இலக்கச் சுட்டி 1+0+2=3 இது மூன்றால் வகுபடும். ஆகவே 102 இரண்டாலும், மூன்றாலும் வகுபடும் எனவே 102 ஆறால் வகுபடும்.
    • 30030 - இது ஆறால் வகுபடும்.
    • 1071 - ஆறால் வகுபடாது.
    • 302 - ஆறால் வகுபடாது.
ஒரு எண் ஒன்பதால் வகுபடும் என்பதை இலகுவாக அறிதல்.
  • எண்ணொன்றின் இலக்கச் சுட்டி 9 ஆக இருப்பின் அந்த எண் 9 ஆல் வகுபடும்.
  • உ+ம்:
    • 27 - இலக்கச் சுட்டி 2+7= 9 எனவே ஒன்பதால் வகுபடும்.
    • 26 - ஒன்பதால் வகுபடாது.
    • 225 - ஒன்பதால் வகுபடும்.
    • 72 -ஒன்பதால் வகுபடும்.
    • 603 - ஒன்பதால் வகுபடும்.
    • 701 - ஒன்பதால் வகுபடாது.
ஒரு எண் பத்தால் வகுபடும் என்பதை இலகுவாக அறிதல்.
  • எண்ணொன்றின் ஒன்றினிடத்து இலக்கம் 0  ஆக இருப்பின்  அந்த எண் 10 ஆல் வகுபடும்.
  • உ+ம்:
    • 20 - ஒன்றினிடத்து இலக்கம் 0 எனவே இவ்வெண் பத்தால் வகுபடும்.
    • 303- பத்தால் வகுபடாது.
    • 2500 - பத்தால் வகுபடும்.
    • 1370 - பத்தால் வகுபடும்.
    • 199 - பத்தால் வகுபடாது.




No comments:

Post a Comment