சூரிய வணக்கப் பாடல்
ஆயிரம் கரங்கள் நீட்டி
அணைக்கின்ற தாயே போற்றி!
அருள் பொங்கும் முகத்தைக் காட்டி
இருள் நீக்கம் தந்தாய் போற்றி!
தாயினும் பரிந்து சாலச்
சகலரை அணைப்பாய் போற்றி!
தழைக்கும் ஓர்உயிர்கட் கெல்லாம்
துணைக்கரம் கொடுப்பாய் போற்றி!
தூயவர் இதயம் போல
துலங்கிடும் ஒளியே போற்றி!
தூரத்தே நெருப்பை வைத்துச்
சாரத்தைத் தருவாய் போற்றி!
ஞாயிறே! நலமே வாழ்க
நாயகன் வடிவே போற்றி!
நானிலம் உளநாள் மட்டும்
போற்றுவோம் போற்றி! போற்றி!
-கவிஞர் கண்ணதாசன்
No comments:
Post a Comment