Monday, September 8, 2025

Montessori கல்வி முறை தோற்றமும் உலகளாவிய வெற்றியும்

Montessori கல்வி முறை – தோற்றமும் உலகளாவிய வெற்றியும்

மொண்டிசோரி முறையின் தோற்றம்

மரியா மொண்டிசோரி (1870–1952) இவர் இத்தாலியின் முதல் பெண் மருத்துவர், psychiatry, anthropology, மற்றும் கல்வி ஆகிய துறைகளில் சிறந்து விளங்கியவர். இவர் ஆரம்பக் காலங்களில் குழந்தைகள் எவ்வாறு கற்றுக்கொள்கிறார்கள் என்பதைப் பற்றி ஆராய்ச்சிகள் செய்யத்தொடங்கினார்.

இவரது முதலாவது வேலை (1890 – 1907):

இவர் முதலில் மனநிலைப் பிரச்சனையுள்ள குழந்தைகளுடன் பணியாற்ற தொடங்கினார். இவர் பணியாற்றும் போது அறிவியல் அடிப்படையிலான கண்காணிப்பை பயன்படுத்தி, அந்தக் குழந்தைகளின் தேவைகளுக்கு ஏற்ப கல்விப் பொருட்களை உருவாக்கினார். இந்தக் குழந்தைகள் சிறப்பான முன்னேற்றம் கண்டதன் விளைவாக, சாதாரண வளர்ச்சியுள்ள குழந்தைகளுக்கும் இதே முறையைப் பயன்படுத்தலாம் என அவர் நம்பத் தொடங்கினார்.

முதல் மொண்டிசோரி பள்ளி: Casa dei Bambini (1907)

ரோமில் ஆரம்பம்: ஜனவரி 6, 1907 ரோமில் உள்ள சான் லோரென்ஸோ(San Lorenzo) என்னும் ஏழ்மை பகுதிக்குள் ஒரு குழந்தைகளுக்கான பராமரிப்பு மையத்தை திறக்க மொண்டிசோரி அழைக்கப்பட்டார். அந்த மையம் Casa dei Bambini (“குழந்தைகளின் வீடு”) என பெயரிடப்பட்டது.

இங்கு இவர் பயன்படுத்திய கல்வி முறைகள் (educational philosophy)

  • குழந்தைகளின் அளவுக்கு ஏற்ற கருவிகள்
  • கையில் தொடும் வகையிலான கற்றல் பொருட்கள்
  • தானாக இயங்கும் செயல்பாடுகள்
  • இடையீடு இல்லாத கற்றல் நேரங்கள்
  • கலந்த வயது வகுப்புகள் (Mixed-age classrooms) (சாதாரணமாக 3 வருட வித்தியாசம்)

இந்த Casa dei Bambini-யின் வெற்றி உலகளாவிய கவனத்தை ஈர்த்தது. இது மொண்டிசோரி முறையின் அதிகாரபூர்வ ஆரம்பத்துக்கு அடிக்கோல் இட்டது.

Montessori Method இன் விரிவாக்கமும் அதன் உலகளாவிய தாக்கமும் (1910கள் – 1930கள்)

  • 1910கள் – 1920கள்:
    மொண்டிசோரி முறை ஐரோப்பா, இந்தியா மற்றும் அமெரிக்காவிற்குள் விரைவாக பரவியது.
    மொண்டிசோரி உலகம் முழுவதும் பயணித்து சொற்பொழிவுகள் வழங்கினார்.
    அவர் எழுதிய The Montessori Method (1912) புத்தகம் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு, பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
    பல பயிற்சி மையங்கள் Montessori Method பயிற்சிக்காக நிறுவப்பட்டன.
  • அமெரிக்காவில் விமர்சனமும் பின்னடைவும் (1910 – 1930கள்):
    ஆனால் அமெரிக்காவில் இதன் வளர்ச்சி சில காரணங்களால் பின்வாங்கியது.
    பாரம்பரியக் கல்வி முறையாளர்களின் எதிர்ப்பு
    முக்கியமான கல்வியாளர்களின் விமர்சனங்கள் (எ.கா., William Heard Kilpatrick, a follower of John Dewey))
    மொண்டிசோரி தத்துவத்தைப் பற்றிய தவறான புரிதல்கள்

Montessori இந்தியாவில் பணியாற்றல் (1939 – 1946)

இரண்டாம் உலகப் போர் காலத்தில் அவர் இந்தியாவில் பயிற்சி அளிக்க மகனுடன் வந்திருந்தார், போர் காரணமாக மொண்டிசோரி இந்தியாவில் இருந்து வெளியேற முடியவில்லை. அதனால் அவரும் அவரது மகன் மாரியோ மொண்டிசோரியும், இந்தியாவில் தங்கினர். அக்காலத்தில் Cosmic Education எனப்படும் ஒரு புதிய கல்விமுறையைக் கண்டுபிடித்தனர் — இது அனைத்துப் பொருட்களும் ஒருங்கிணைந்துள்ளன என்ற கருத்தில் மையம் கொண்டது, குறிப்பாக 6–12 வயதுள்ள குழந்தைகளுக்காக உருவாக்கப்பட்டது. நூற்றுக்கணக்கான ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளித்தார் அத்தோடு தன் கல்வி முறையை மேலும் மேம்படுத்தினார்.

மறுவளர்ச்சி (1946 – 1970கள்)

போர் முடிந்தபின், மொண்டிசோரி கல்வி முறை ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் மீண்டும் அதிக கவனம் பெற்றது,

Association Montessori Internationale (AMI) எனும் அமைப்பை 1929ல் மொண்டிசோரி உருவாக்கினார். இந்த அமைப்பு அவரது கல்வி முறைமையின் தூய்மையைப் பாதுகாத்து, உலகளாவிய பரவலுக்கு ஆதரவு அளித்தது.

1950கள் மற்றும் 1960களில் அமெரிக்காவில் மீண்டும் ஒரு எழுச்சி:

  • பாரம்பரியக் கல்வியை நோக்கி வளர்ந்த அதிருப்தி
  • மொண்டிசோரி வளர்ச்சி குறித்த பாதிப்புகள்
  • பெற்றோர்களிடத்தும் ஆசிரியர்களிடத்தும் மேலிருந்து இருந்து வந்த முயற்சிகள்

நவீன வளர்ச்சி (1980கள் – இன்று வரை)

இன்று 140க்கும் மேற்பட்ட நாடுகளில் ஆயிரக்கணக்கான மொண்டிசோரி பள்ளிகள் இயங்குகின்றன.

பல்வேறு பயன்பாடுகள்:

  • குழந்தைப் பருவம் (0–6 வயது) மிகவும் பரவலாக உள்ளது.
  • இப்போது பச்சிளம், தொடக்க, நடுத்தர மற்றும் மேல்நிலை பள்ளி மாணவர்களுக்கான திட்டங்களும் சேர்ந்து உள்ளன.
  • சில அரசுப் பள்ளிகளும் மொண்டிசோரி முறையை தங்களின் பாடத்திட்டத்தில் இணைத்துள்ளன,
  • அமெரிக்காவில் அறிவியல் ஆதரவு வளர்ச்சி, உளவியல் மற்றும் நரம்பியல் விஞ்ஞானங்களில் நடக்கும் ஆய்வுகள் மொண்டிசோரி முறையின் முக்கிய அம்சங்களை ஆதரிக்கின்றன. அக்காரணங்களுள் சில:
    கற்றுணர்வின் உணர்திறன் மிக்க காலங்கள் (Sensitive periods of learning)
    உடல் இயக்கம் அறிவுசார் வளர்ச்சி மற்றும் அறிவாற்றல் செயல்பாடு (Importance of movement in cognition)
    உள்ளார்ந்த உந்துதல் (Intrinsic motivation)

மொண்டிசோரி முறையின் முக்கிய அம்சங்கள்

  • தயார் செய்யப்பட்ட சூழல் (Prepared Environment): தாங்களாக கற்றுக்கொள்ளும் வகையில் வகுப்பறைகள் அமைக்கப்படுகின்றன.
  • தானாகக் கற்றல் (Auto-Education): சரியான சூழலில் குழந்தைகள் தாங்களே கற்றுக்கொள்ளக்கூடியவர்கள் என்ற நம்பிக்கை.
  • மொண்டிசோரி கற்றல் பொருட்கள் (Montessori Materials): ஒவ்வொரு வளர்ச்சி கட்டத்திற்கும் ஏற்ற, சிறப்பு உபகரணங்கள்.
  • ஆசிரியரின் பங்கு(Teachers Role): ஆசிரியர் ஒரு வழிகாட்டி அல்லது ஊக்குவிப்பவர்.
  • வரம்புகளுக்குள் விடுதலை (Freedom within Limits): கட்டமைக்கப்பட்ட கட்டமைப்புக்குள் குழந்தைகள் தாங்களாக செயல்களை தேர்ந்தெடுக்கின்றனர்.

No comments:

Post a Comment