Thursday, December 4, 2025

Sigular plural in English and Tamil



Singular & Plural

Basic Singular → Plural

ஆங்கிலத்தில் அநேகமான சொற்களைப் பன்மையாக்கும் போது ஒருமைச் சொல்லின் இறுதியில் 's' சேர்க்கப்படும். அவ்வாறன சில சொற்கள் கீழே தரப்பட்டுள்ளன.


Singular Plural
boy
சிறுவன் 
boys
சிறுவர்கள்
girl
சிறுமி
girls
சிறுமிகள்
cat
பூனை
cats
பூனைகள்
dog
நாய்
dogs
நாய்கள்
book
புத்தகம்
books
புத்தகங்கள்
car
கார்
cars
கார்கள்
flower
பூ
flowers
பூக்கள்
apple
அப்பிள்
apples
அப்பிள்கள்
pen
பேனை
pens
பேனைகள்
chair
கதிரை
chairs
கதிரைகள்

Words ending with -s, -sh, -ch, -x, -o

ஒருமைச் சொற்கள் முடியும் எழுத்தக்கள் 's, sh, ch, x, o' ஆக  இருந்தால் பன்மை யாகுவதற்கு  சொல்லின் இறுதியில் 'es' சேர்க்கப்படும். 

(Add -es)

Singular Plural
bus
பேருந்து
buses
பேருந்துக்கள்
glass
குவளை
glasses
குவளைகள்
dish
தட்டு
dishes
தட்டுக்கள்
brush
தூரிகை
brushes
தூரிகைகள்
match
தீப்பெட்டி
matches
தீப்பெட்டிகள்
box
பெட்டி
boxes
பெட்டிகள்
potato
உருளைக்கிழங்கு
potatoes
உருளைக்கிழங்குகள்
tomato
தக்காளி
tomatoes
தக்காளிகள்
'

Words Ending With -y

ஒருமைச் சொற்கள் 'y' எழுத்தில் முடிந்தால், அவ் 'y' எழுத்திற்கு முன்னால் உள்ள எழுத்து ஓர் உயிர் எழுத்தானால் (a,e,i,o,u) பன்மையாக்குவதற்கு இறுதியில் 's' மட்டும் சேர்க்கப்படும். அல்லாவிட்டால் இறுதியில் உள்ள 'y' ஐ அகற்றிவிட்டு 'ies' சேர்க்கப்படும்.

  • If consonant + y → change yies
  • If vowel + y → just add s
Singular Plural
baby
குழந்தை
babies
குழந்தைகள்
lady
சீமாட்டி
ladies
சீமாட்டிகள்
city
நகரம்
cities
நகரங்கள்
story
கதை
stories
கதைகள்
toy
விளையாட்டுப் பொருள்
toys
விளையாடுப் பொருட்கள்
boy
சிறுவன்
boys
சிறுவர்கள்
key
திறப்பு
keys
திறப்புக்கள்

Words Ending With -f / -fe

சொற்கள் 'f' அல்லது 'fe' முடிந்தால் 'f'' ஐ அகற்றிவிட்டு 'ves' சேர்க்கப்படும்.

(Change to -ves)

Singular Plural
leaf
இலை
leaves
இலைகள்
life
வாழ்க்கை
lives
வாழ்க்கைகள்
wolf
நரி
wolves
நரிகள்
knife
கத்தி
knives
கத்திகள்
shelf
அலுமாரி
shelves
அலுமாரிகள்

Irregular Plurals

விதிகளுக்கு உட்படாமல் வேறு வடிவத்தை எடுக்கும் ஒருமைச் சொற்களும் உண்டு. அவ்வாறான சில சொற்கள் கீழே தரப்பட்டுள்ளன.

Singular Plural
man
ஆண்
men
ஆண்கள்
woman
பெண்
women
பெண்கள்
child
பிள்ளை
children
பிள்ளைகள்
foot
பாதம்
feet
பாதங்கள்
tooth
பல்
teeth
பற்கள்
mouse
எலி
mice
எலிகள்
person
நபர்
people
நபர்கள்
goose
வாத்து
geese
வாத்துக்கள்

Same Singular & Plural

சில சொற்களுக்கு பன்மை வடிவமும் ஒருமை வடிவமும் ஒரே வடிவில் இருக்கும். அவ்வாறான சில சொற்கள் கீழே தரப்பட்டுள்ளன.

Singular/Plural

  • sheep 
  • deer
  • fish
  • species
  • aircraft



Add more Singular plural in Comments

No comments:

Post a Comment