Friday, December 27, 2024

சூரிய வணக்கப் பாடல்



சூரிய வணக்கப் பாடல்

சூரிய வணக்கப் பாடல்

ஆயிரம் கரங்கள் நீட்டி
அணைக்கின்ற தாயே போற்றி!
அருள் பொங்கும் முகத்தைக் காட்டி
இருள் நீக்கம் தந்தாய் போற்றி!

தாயினும் பரிந்து சாலச்
சகலரை அணைப்பாய் போற்றி!
தழைக்கும் ஓர்உயிர்கட் கெல்லாம்
துணைக்கரம் கொடுப்பாய் போற்றி!

தூயவர் இதயம் போல
துலங்கிடும் ஒளியே போற்றி!
தூரத்தே நெருப்பை வைத்துச்
சாரத்தைத் தருவாய் போற்றி!

ஞாயிறே! நலமே வாழ்க
நாயகன் வடிவே போற்றி!
நானிலம் உளநாள் மட்டும்
போற்றுவோம் போற்றி! போற்றி!



-கவிஞர் கண்ணதாசன்


Sunday, December 8, 2024

மடக்கை விதிகளும் பயிற்சிகளும்

மடக்கை(Logarithm)

  • If ax=N then logaN=x

    Examples:
    101=10 => log1010=1
    31=3 => log33=1
    21=2 => log22=1

    In General
    a1=a => logaa=1

  • If ax=N then logaN=x

    Examples:
    100=1 => log101=0
    30=1 => log31=0
    20=1 => log21=0

    In General
    a0=1 => loga1=0

  • If logaN=x then ax=N

    Examples:
    Log1010=1 => 101=10
    Log33=1 => 31=3
    Log22=1 => 21=2

    In General
    Logaa=1 => a1=a

    If logaN=x then ax=N

    Examples:
    Log101=0 => 100=1
    Log31=0 => 30=1
    Log21=0 => 20=1

    In General
    Loga1=0 => a0=1


மடக்கை விதிகள்(Laws 0f Logarithm)

  • loga(mn) = logam + logan

    Examples:
    log10(10x100) = log1010 + log10100

    log5(125x25) = log5125 + log525


  • loga(m/n) = logam - logan

    Examples:
    Log10(100/10) = log10100 - log1010

    Log5(125/25) = log5125 - log525

  • logamr = r logam

    Examples:
    Log10104 = 4 log1010

    Log51255= 5 log5125

பயிற்சிகள்(Exercises)

  • log101000
    =log10103
    = 3 log1010
    = 3 x 1 (log1010=1)
    =3

  • log1025 + log108 - log102
    =log10(25 x 8 / 2)
    =log10(100)
    =log10102
    =2 log1010
    =2 x 1
    =2

  • 2 log108 + 2 log105 = log1043 + log10x
    log10x = 2 log108 + 2 log105 - log1043
    = log1082 + log1052 - log1043
    =log10(82 x 52/43)
    log10x = log10(25)
    x=25

  • log24 + log28
    =log2(4 x 8)
    =log2(32)
    =log225
    =5 x 1
    =5

  • log520 + log54 – log516
    =log5(20 x 4 / 16)
    =log5(5)
    =1

  • log10200 + log10300 – log560
    =log10(200 x 300 / 60)
    =log10(1000)
    =log10(103)
    =3 log1010
    =3

  • log10x - log102 = log103 – log104 + 1
    log10x =log102 + log103 – log104 + log1010
    =log10(2 x 3 x 10 /4)
    log10x =log10(15)
    x = 15

Wednesday, October 30, 2024

Sakthi muthalkal

சக்தி முதல்கள்

எம்மால் செய்யப்படும் பல்வேறு செயற்பாடுகளுக்கு சக்தி தேவைப்படுகின்றது. எமக்குத் தேவையான சக்தியை சக்தி முதல்களிருந்து பெற்றுக்கொள்கின்றோம்.

செயற்பாடுசக்திமுதல்
உணவு சமைத்தல்விறகு, மின், L.P.வாயு
போக்குவரத்துபெற்றோல், டீசல்
ஆடைகளை உலர்த்தல்சூரியன்
இலத்திரனியல் உபகரணங்கள்மின்
தொழிற்சாலை இயந்திரங்கள் இயங்குதல்மின்

சக்தி முதல்களை இரண்டு வகையாகப் பிரிக்கலாம்.

மீளப்புதுப்பிக்கக்கூடிய சக்தி முதல்கள்மீளப்புதுப்பிக்க முடியாத சக்தி முதல்கள்
ஓடும் நீரின் சக்தி
சூரிய சக்தி
உயிர்த்திணிவு
புவிவெப்ப சக்தி
காற்று சக்தி
கனிய எண்ணெய்
கற்கரி
இயற்கைவாயு
அணுக்கருச்சக்தி

பயன்படுத்தும் போது அல்லது குறிகிய காலத்தில் மீண்டும் உருவாக்கக்கூடிய சக்தி முதல்கள் மீளப்புதுப்பிக்கக்கூடிய சக்தி முதல்கள் எனப்படும்.

ஒரு தடவை பயன்படுத்தும் போது மீண்டும் உருவாகாத அல்லது மீண்டும் உருவாக நீண்ட காலத்தை எடுக்கும் சக்தி முதல்கள் மீளப்புதுப்பிக்க முடியாத சக்தி முதல்கள் எனப்படும்.

சூரியசக்தி

அனுகூலம் பிரதிகூலம்
மீளப்புதுப்பிக்கக்கூடியது.
சுற்றாடலை மாசடையச் செய்யாதது.
இலாபகரமானது
சூரியப்படல் விலை கூடியது. மழைமேகம் உள்ள நாட்களில் சூரியப்படலின் வினைத்திறன் குறையும்.
சூரியப்படலில் இருந்து பெற்றுக்கொள்ளப்படும் மின் சக்தியை மின் கலங்களில் சேமிக்கலாம்.
எனினும் கலங்களில் அதிக அளவு மின் சக்தியை களஞ்சியப்படுத்த முடியாது.
(செயலிழந்த கலங்களை சூழல் மாசடையாமல் முறையாக அகற்ற வேண்டும்)

காற்று

நெல்லைத் தூய்மைப்படுத்தல்
காற்றாலைகளினால் தானியங்களை அரைத்தல்
பாய்க்கப்பலில் பயணம் செய்தல்
மின் உற்பத்தி

புவி வெப்பசக்தி

புவியின் உள்ளே நிலவும் வெப்பத்தைப் பயன்படுத்தி பெற்றுக்கொள்ளக் கூடிய சக்தி புவி வெப்பச்சக்தி ஆகும்.
நிலத்தின் உள்ளே உள்ள குழம்பின் அதிக வெப்பம் காரணமாக நீர் வெப்பமடைகின்றது.
அதனால் உண்டாகும் நீராவியைப் புவி மேற்பரப்புக்கு கொண்டு வருவதன் மூலம் சூழலிகள் சுழற்றப்படுகின்றன. சுழலியின் மூலம் தைனமோவை இயக்கி மின்னை உற்பத்தி செய்து கொள்ளலாம்.

ஓடும் நீரின் சக்தி

நதி நீரைப்பயன்படுத்தி நீர்ச்சக்கரங்கள் சுழலவிடப்பட்டு தானியம் அரைத்தல்
நீர் மின்சாரம் பெறுதல்.


அனுகூலம்பிரதிகூலம்
சூழல் மாசடையாது.
இலாபகரமானது.
நீர்த்தேக்கம் அமைக்க அதிக பணம் செலவாகின்றது.
செயற்கை நீர்த்தேக்கம் காரணமாக வனவிலங்குகளின் உறைவிடம் இல்லாமல் போகின்றது.
எதிர்பார்த்த மழை கிடைக்காதபோது மின் உற்பத்தி பாதிப்படைகின்றது.

உயிர்த்திணிவு

தாவரங்கள், விலங்குகளிலிருந்து பெற்றுக்கொள்ளப்படுகின்றவை உயிர்த்திணிவுகள் எனப்படும். (மீளப்புதுப்பிக்கக் கூடியது. தாவரங்களை பயிரிடுவதன் மூலம் மீண்டும் எரிபொருளை பெற்றுக் கொள்ளலாம்)
உ+ம்:
விறகு
உயிர் வாயு உற்பத்தி

கனிய எண்ணெய்

கனிய எண்ணெய் என்பது ஆதிகாலத்தில் வாழ்ந்த தாவர, விலங்குப் பகுதிகளால் உருவான சுவட்டு எரிபொருளாகும். நிலத்தினுள்ளே பாறைத்தகடுகளுக்கிடையே காணப்படும். உ+ம்:
டீசல்
மண்ணெண்ணெய்
பெற்றோல்

அனுகூலம்பிரதிகூலம்
இதை இயந்திரங்களில் இலகுவாகப் பயன்படுத்தலாம். தகணமாகும் போது வளியை மாசடையச் செய்யும் வாயு வெளியேறும்.
விநியோகம் வரையறுக்கப்பட்டிருத்தல்.

நிலக்கரி

அதிகாலத்தில் இறந்து போன தாவரங்கள் நிலத்துக்கடியில் மாற்றங்களுக்கு உள்ளாகியதன் காரணமாக நிலக்கரி உருவாக்கப்பட்டுள்ளது. நிலத்தினுள்ளே பாறைத்தகடுகளுக்கிடையே காணப்படும்.

அனுகூலம்பிரதிகூலம்
தகணமடையும் போது பெருமளவு வெப்பத்தை உண்டாக்கும்.
இலகுவாகப் பயன்படுத்தலாம்.
தகணமாகும் போது வளியை மாசடையச் செய்யும் வாயு வெளியேறும்.
விநியோகம் கனிய எண்ணெயை விட அதிகம்.

இயற்கை வாயு

மண்ணுக்கடியில் பாறைகளிடையே காணப்படும் மீதேன் போன்ற வாயுக்கள் இயற்கை வாயுக்கள் எனப்படும்.

அனுகூலம்பிரதிகூலம்
உணவு சமைக்க
குளிர் நாடுகளில் வீடுகளை சூடாக வைத்துக்கொள்ளல்.
வளியை மாசடையச் செய்யும்.
அளவு மட்டுப்பட்டிருத்தல்.

கருச்சக்தி

சூரியனில் கருத்தாக்கம் மூலமே சக்தி உற்பத்தி நடைபெறுகின்றது. ஒருவகை அணு வேறொரு வகை அணுவாக மாறுகின்றது.

யுரேனியம், புளூட்டோனியம் போன்ற கதிர்த் தொழிற்பாட்டு மூலகங்களைப் பயன்படுத்தி கருச்சக்தி உற்பத்தி செய்யப்படுகின்றது.

மின் உற்பத்தி

அனுகூலம்பிரதிகூலம்
யுரேனியம், புளூட்டோனியம் போன்ற கதிர்த்தொழிற்பாட்டு மூலகங்களின் சிறிய அளவானது பெருமளவு சக்தியைத் தரும்.
மூலப்பொருட்களை குறைந்த விலையிற்பெறலாம்.
வளி மாசைடையாது.
கருச்சக்தி நிலையங்களை அமைப்பதற்கான செலவு மிக அதிகம்.
கருச்சக்தி நிலையங்களை நடாத்துவதற்கு பெருமளவு பணம் தேவை.
வெளியேறும் கழிவுப் பதார்த்தங்கள் நச்சுத்தன்மையானவை.
(அவற்றை சூழலுக்கு விடுவிக்காது ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு களஞ்சியப்படுத்தி வைப்பது அவசியம்)
விபத்துக்கள் ஏற்பட்டால் கதிர்த்தாக்கம் காரணமாக ஏற்படும் விளைவுகள் பாரதூரமானவை.

சக்தி முதல்களின் முறையான பாவனை

மீளப்புதுப்பிக்க முடியாத சக்தி முதல்கள் காலம் செல்லும் போது முடிவடைந்து விடும். எனவே அவற்றிலிருந்து அதிக காலத்திற்கு பயன்பெற வேண்டுமானால் (எதிர் காலச் சந்ததியினர் பயன்பெறவேண்டுமானால்) அவற்றை சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும்.


  • மின் பாவனையை சிக்கனமாக்கல்.
  • குறுகிய தூரப்பயணங்களுக்கு துவிச்சக்கரவண்டியைப் பயன்படுத்தல்.
  • பொதுப் போக்குவரத்தை மேம்படுத்தல், பயன்படுத்தல்.
  • எரிபொருள் வினைத்திறன் வாகனங்கள்/இயந்திரங்களைப் பயன்படுத்தல்.
  • மாற்றுசக்தி முதல்களைப் பயன்படுத்தல்.(சூரிய சக்தி)
  • சமைப்பதற்குத் தேவையான எரிபொருளை அயற்சூழலில் இருந்து பெற்றுக்கொள்ளல்.

Saturday, October 19, 2024

Python Programming with Example in Tamil

தமிழில் Python Programming

நாங்கள் Python Program இல் உள்ள எல்லா techniques குகளையும் எவ்வாறு பயன்படுத்துவது என்று  உதாரணத்துடன் பார்ப்போம்.

இதற்கு நாங்கள் ஒரு வட்டத்தின் ஆரை தரப்பட்டால் எவ்வாறு அதன் பரப்பளவைப் பெறுவது என்ற உதாரணத்தை எடுத்துக்கொள்வோம்

main program ஐ மாத்திரம் பயன்படுத்தல்.

இங்கு PI constant ஆகவும் r  variable ஆகவும் உள்ளது.

PI=22/7
r=int(input("Enter a radius of the Circle? "))
print("Area of the Circle =" , PI*r*r)
r=int(input("Enter a radius of the Circle? "))
print("Area of the Circle =" , PI*r*r)

வெளியீடு
Enter a radius of the Circle? 7
Area of the Circle = 154.0
Enter a radius of the Circle? 14
Area of the Circle = 616.0

இங்கு பரப்பளவைப் பெறுவதற்கு CirlceArea(r) எனும் procedure பயன் படுத்தப்பட்டுள்ளது. இங்கு r parameter ஆகும்.

PI=22/7

def CirlceArea(r):
    print("Area of the Circle =" , PI*r*r)

r=int(input("Enter a radius of the Circle? "))
CirlceArea(r)
r=int(input("Enter a radius of the Circle? "))
CirlceArea(r)

இங்கு பரப்பளவைப் பெறுவதற்கு CirlceArea(r) எனும் function பயன் படுத்தப்பட்டுள்ளது.  r parameter ஆகும். CirlceArea(r) எனும் function பரப்பளவை return ஆக்குகின்றது. அப் பெறுமானம் function ஐப் பயன்படுத்தும் இடத்தில்  கிடைக்கும்.

PI=22/7

def CirlceArea(r):
    return f"Area of the Circle ={PI*r*r}"  

r=int(input("Enter a radius of the Circle? "))
print(CirlceArea(r))
r=int(input("Enter a radius of the Circle? "))
print(CirlceArea(r))

இங்கு MyCircle எனும் class உருவாக்கப்பட்டு அதற்குள் PI எனும் constant உம் GetR(self,rr), CirlceArea(self) எனும் method டுக்களும் பயன்படுத்தப் பட்டுள்ளன. main program இல் C1,C2 எனும் object உருவாக்கப்பட்டு அம் method க்கல் call பண்ணப்பட்டுள்ளது. இங்கு rr parameter ஆகவும் r class varible ஆகவும் உள்ளது.

class MyCircle:
    PI=22/7
    
    def GetR(self,rr):
        self.r=rr
    
    def CirlceArea(self):
        print("Area of the Circle =" , self.PI*(self.r*self.r))

r=int(input("Enter a radius of the Circle? "))
C1=MyCircle()
C1.GetR(r)
r=int(input("Enter a radius of the Circle? "))
C2=MyCircle()
C2.GetR(r)
C1.CirlceArea()
C2.CirlceArea()

MyCircle class க்கு GetR(self,rr) method க்குப் பதிலாக ஒரு constructor பயன்படுத்தப்பட்டுள்ளது. Object  உருவாக்கும் இடத்திலேயே constructor call பண்ணப்படும்..

class MyCircle:
    PI=22/7
    
    def __init__(self,rr):
        self.r=rr
    
    def __str__(self):
        return f"Area of the Circle ={ self.PI*(self.r*self.r)}"

r=int(input("Enter a radius of the Circle? "))
C1=MyCircle(r)
r=int(input("Enter a radius of the Circle? "))
C2=MyCircle(r)
print(C1)
print(C2)

Tuesday, October 15, 2024

பச்சைவீட்டுவாயுக்கள்

பச்சைவீட்டுவாயுக்கள்(Greenhouse gas)

  • சூரியனில் இருந்து பெறப்படும் சக்திக்கும் பூமியினால் மீண்டும் தெறிப்படையச் செய்யும் சக்திக்கும் இடையே சமநிலை காணப்படும்.
  • புவிக் கோளத்தில் காணப்படும் சில வாயுக்களால் புவியிலிருந்து தெறிப்படையும் கதிர்களின் ஒரு பகுதி அகத்துறிஞ்சப்படும், மிகுதி தெறிப்படையும்.
  • கதிர்களின் ஒரு பகுதியை அகத்துறிஞ்சும் புவிக்கோளத்தில் காணப்படும் வாயுக்கள் காபனீரொட்சைட்டு, நீராவி, மெதேன், ஓசோன், குளோரோபுளோரோ காபன்.
  • இவ்வாயுக்களால் அகத்துறிஞ்சப்பட்ட கதிர்கள் மெதுவாக மீண்டும் புவிமேற்பரப்பை நோக்கி விடப்படும்.
  • இது புவியின் வெப்பநிலையை பேணவும், உயிர் அங்கிகளுக்கு பொருத்தமான காலநிலையை நிலைநிறுத்தவும் உதவும்.
  • இந்நிலை பச்சைவீட்டுவிளைவு எனவும் இதற்கு உதவும் வாயுக்கள் பச்சைவீட்டுவாயுக்கள் எனவும் அழைக்கப்படும்.
பச்சைவீட்டுவாயுக்கள்
காபனீரொட்சைட்டு CO2
நீராவி H2O
மெதேன் CH4
ஓசோன்
குளோரோபுளோரோ காபன் CFC
கந்தகவீரொட்சைட்டு SO2
நைதரசனின் ஓட்சைடுக்கள்

மனித நடவடிக்கைகளால் புவிக்கோளத்திற் காணப்படும் பச்சைவீட்டுவாயுக்களின் அளவு அதிகரிக்கின்றது. இதனால் புவிவெப்பம் அதிகரிக்கின்றது. புவியின் வெப்பநிலை தொடர்ச்சியாக அதிகரித்தல் காரணமாக துருவப் பனிமலைகள் உருகுதல், கடல்மட்டம் உயருதல், காலநிலையில் மாற்றங்கள் (வறட்சி, வெள்ளம்) ஏற்படுகின்றன.

பச்சைவீட்டுவாயுக்கள் உருவாகும் முறைகள்

  • காபனீரொட்சைட்டு - சுவட்டு எரிபொருட்கள் தகணமடைதல்
  • மெதேன் - குப்பைக் கூழங்கள், இறந்த தாவர விலங்குகளின் பகுதிகள், சேதனப்பதார்த்தங்கள் என்பவற்றின் மீது பற்றீரியா தொழிற்படுதல்
  • குளோரோபுளோரோ காபன் - குளிர்சாதனப்பெட்டி, வளிப்பதனமாக்கி, நறுமணமூட்டிகள் ஆகிய உபகரணங்களிலிருந்து வெளியேறும் .
  • கந்தகவீரொட்சைட்டு - நிலக்கரியை எரிபொருளாகப் பயன்படுத்தல், பெற்றோலிய எரிபொருட்கள் தகணமடைதல், வல்கனைசுப்படுத்தப்பட்ட இறப்பர் பொருட்களை எரித்தல், அழிவடையும் சேதனப் பொருளின் மீது பற்றீரியா தொழிற்படுதல், எரிமலைகள் வெடித்தல்.
  • நைதரசனின் ஓட்சைடுக்கள் - மின்னலின் போது வளிமண்டலத்தில் உள்ள நைதரன் ஓட்சிசனுடன் தாக்கமடைந்து நைதரசனின் ஓட்சைடுக்கள் உருவாதல், சில வாகனங்களில் அகத்தகன இயந்திரங்களில் நைதரசன் ஓட்சிசனுடன் தாக்கமடைந்து நைதரசனின் ஓட்சைடுக்கள் உருவாதல்.

Friday, April 7, 2023

உறவுகள் மேம்பட சில தகவல்கள்

  • நானே பெரியவன், நானே சிறந்தவன் என்ற அகந்தையை விடுங்கள்.
  • அர்த்தமில்லாமலும், பின்விளைவு அறியாமலும் பேசிக்கொண்டேயிருப்பதை விடுங்கள்.
  • எந்த விஷயத்தையும் பிரச்சினையையும் நாசூக்காக கையாளுங்கள், விட்டுக் கொடுங்கள்.
  • சில நேரங்களில் சங்கடங்களைச் சகித்துத்தான் ஆகவேண்டும் என்று உணருங்கள்.
  • நீங்கள் சொன்னதே சரி, செய்ததே சரி என்று வாதாடாதீர்கள்.
  • குறுகிய மனப்பான்மையை விட்டொழியுங்கள்.
  • உண்மை எது, பொய் எது என்று விசாரிக்காமல் இங்கே கேட்டதை அங்கே சொல்வதும், அங்கே கேட்டதை இங்கே சொல்வதையும் விடுங்கள்.
  • மற்றவர்களை விட உங்களையே எப்போதும் உயர்வாக நினைத்து கர்வப்படாதீர்கள்.
  • அளவுக்கதிகமாய், தேவைக்கதிகமாய் ஆசைப்படாதீர்கள்.
  • எல்லோரிடத்திலும், எல்லா விஷயங்களையும் அவர்களுக்கு சம்பந்தம் உண்டோ இல்லையோ சொல்லிக் கொண்டு இருக்காதீர்கள்.
  • கேள்விப்படுகிற எல்லா விஷயங்களையும் நம்பி விடாதீர்கள்.
  • அற்ப விஷயங்களையும் பெரிது படுத்தாதீர்கள் .
  • உங்கள் கருத்துக்களில் உடும்புப்பிடியாய் இல்லாமல் கொஞ்சம் தளர்த்திக் கொள்ளுங்கள்.
  • மற்றவர் கருத்துகளை, செயல்களை, நடக்கின்ற நிகழ்சிகளைத் தவறாகப் புரிந்து கொள்ளாதீர்கள்.
  • மற்றவர்களுக்குரிய மரியாதை காட்டவும், இனிய, இதமான சொற்களைப் பயன்படுத்தவும் தவறாதீர்கள்.
  • புன்முறுவல் காட்டவும், சிற்சில அன்புச் சொற்களைச் சொல்லவும் கூட நேரமிலாது போல் நடந்து கொள்ளாதீர்கள்.
  • பேச்சிலும், நடத்தையிலும் பண்பில்லாத வார்த்தைகளையும், தேவையில்லாத மிடுக்கையும் காட்டுவதை தவிர்த்து அடக்க்கத்தையும் பண்பையும் காட்டுங்கள்.
  • அவ்வப்போது நேரில் சந்தித்து மனம் திறந்து பேசுங்கள்.
  • பிரச்சினைகள் ஏற்படும் போது அடுத்தவர் முதலில் இறங்கி வர வேண்டும் என்று காத்திருக்காமல் நீங்களே பேச்சைத் தொடக்க முன் வாருங்கள்.

வேதாத்திரி மகரிசி

Tuesday, September 13, 2022

சேர்த்தெழுதல் பயிற்சிகள்

சேர்த்தெழுதல்

அடி+சுவடி=அடிச்சுவடி
ஆறு+மலை=ஆற்றுமலை
ஐந்து+ஐந்து=ஐவைந்து
ஐந்து+புலம்=ஐம்புலம்
ஒன்று+ஊர்=ஓரூர்
ஒன்று+ஒன்று=ஒவ்வொன்று
கப்பல்+கூலி=கப்பற்கூலி
கயிறு+கட்டில்=கயிற்றுக்கட்டில்
கருமை+பலகை=கரும்பலகை
கல்+குகை=கற்குகை
கல்+கோயில்=கற்கோயில்
கல்+தூண்=கற்றூண்
காடு+அரசன்=காட்டரசன்
காவி+உடை=காவியுடை
குருவி+கூடு=குருவிக்கூடு
தமிழ்+ சொல்=தமிழ்ச்சொல்
தெங்கு+காய்=தேங்காய்
தெற்கு+ திசை=தென்திசை
தேயிலை+நீர்=தேநீர்
தேன்+குழல்=தேங்குழல்
தேன்+நீர்=தேனீர்
தேன்+மொழி=தேன்மொழி
நன்மை+செய்தி=நற்செய்தி
நான்கு+நூறு=நானூறு
நெல் + வயல் =நெல்வயல்
பச்சை+இலை=பச்சிலை
பல்+ பொடி= பற்பொடி
பனை+காய்=பனங்காய்
புது+பானை=புதுப்பானை
பூ+கொடி=பூங்கொடி
பொன்+தகடு=பொற்றகடு
மண்+கலம்=மட்கலம்
மண்+குடம்=மட்குடம்
மரம்+ வேர்=மரவேர்
மரம்+கொம்பு=மரக்கொம்பு
மலர்+ செண்டு=மலர்ச்செண்டு
மலை+அரசன்=மலையரசன்
மலை+உச்சி = மலையுச்சி
மனம்+மாற்றம்=மனமாற்றம்
முள்+செடி=முட்செடி
முன்பு+நூறு=முன்னூறு
மூன்று+நூறு=முந்நூறு
மூன்று+மூன்று=மும்மூன்று
வடக்கு+மேற்கு=வடமேற்கு
வான்+ஒலி=வானொலி
வெண்டி+செடி = வெண்டிச்செடி
வெம்மை+நீர்=வெந்நீர்